சொல்ல கேட்டது

on Monday, June 29, 2009

"We don't want to go back to tomorrow, we want to go.. forward" - Dan Quale

யதார்த்தம்

on Wednesday, June 24, 2009

காதல் இருந்தபோது ஆயிரம் பேர் இருந்தாலும் அவள் மட்டுமே அழகாக
கல்யாணம் முடிந்த போது அனைவரும் அழகு அவளை தவிர

சொல்ல கேட்டது

நீயின்றி நான் இல்லை என்பதல்ல காதல்

எதுவுமே இல்லையென்றாலும் நான் இருப்பேன் என்பதுதான் காதல்

சும்மா கலாசுராம்பா

நேற்று இரவு தொலைக்காட்சியில் கன்னட சந்திரமுகி பார்த்தேன்
அடடா என்ன ஒரு ஈ அடிச்சான் காப்பி
இரவு நேரத்திலும் குளிர் கண்ணாடி அணியும் நாயகன்
எனது 3 வயது மகள் கேட்கிறாள் எதற்காக இரவு கூட கண்ணாடி அணிந்து இருக்கிறார் என்று
என்ன சொல்வது என்றுதான் லாஜிக் இருந்து இருக்கிறது
ஒவ்வொரு மொழியிலும் மாற்றி எடுக்க படும்போது
கதையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்க வேண்டாமா
ஜோதிகாவை காப்பி அடிக்க சரியாக தெரியவில்லை
சவுந்தர்யா நல்ல நடிகை தான் பாவம் அநியாயமாக இறந்து போனார்
சிறுவர்களே பரிட்சையில் காப்பி அடிக்கும்போது சிறிதாவது மாற்றி எழுதுகிறார்கள்
ஏதோ தெரு கூத்து பாத்தது போல்
கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆனா கதைதான்
சந்திரமுகியின் அசல் மணிச்சித்திரத்தாழ்
மற்றது எல்லாமே ஈ அடிச்சான் காப்பி
காசு குடுத்தவன் காது கிழிஞ்சது தான் மிச்சம்.

இளைஞர்கள் இந்நாட்டு மன்னர்கள்

on Monday, June 22, 2009

மத்திய அரசாங்கத்தில் ஓய்வு 60 வயதில்
மாநில அரசாங்கத்தில் ஓய்வு 58 வயதில்
தனியார் நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் இல்லை மரியாதை
ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் தடியே துணையாக
இளைஞர் அணி தலைவராக 66 வயது இளைஞர் எப்போதும்
85 வயதிலும் விடாப்பிடியாக தலைவராக

அவளுக்காக


இவன் இரவு விழித்து பாடம் எழுதினான்

அவள் பள்ளி இறுதியில் முதல் மாணவி

திருமணம்

வட துருவத்தையும் தென் துருவத்தையும்
இணைக்க முயற்சிக்கும் ஒரு நிகழ்வு