நெஞ்சு பொறுக்குதில்லையே

on Tuesday, June 16, 2009

திரையில் மட்டுமே அநீதிக்காக உயிர் விடும் தலைவன்
தொண்டன் மட்டுமே தீ குளிக்கும் அவலம்
தமிழுக்காக குரல் கொடுப்பவர் மகன் ஆங்கில பள்ளியில்
பெற்றோரின் பசி அறியாது தலைவனின் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம்
எவருக்கும் பயன்படாமல் ஸ்விஸ் பாங்கில் கள்ளபணம்
உரிமையை காசுக்கு விற்கும் வாக்காளன்
பொருளுக்காக கடமை மீறும் காவலன்
வாரிசுகள் மட்டுமே வகிக்கும் மந்திரிபதவி
பணம் ஒன்றே கொள்கையாக அரசியல்வா(வியா)தி

0 comments: